என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொப்பரை தேங்காய்"
- கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலய த்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் இ .பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில் கொப்பரை தேங்காய் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.
முன்னதாக கோவை வேளாண்மை பல்கலைக்க ழகத்தில் தென்னை தொழில்நுட்ப மேலாண்மை விருது பெற்ற நல்லேர் உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் ரங்கநா தனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது. தக்காளி விலைஉயர்ந்த போது,தக்காளியா தங்கமா என விவாதம் செய்தவர்கள், தங்கம் விலை குறையாது என்று உத்தரவாதம் உண்டு.
அதேபோல தக்காளி விலை குறையாது என அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா ? தக்காளி விலை உயர்ந்த போது அதனை உபயோகிப்பவர்கள் மட்டும் கஷ்டப்பட்டனர். விலை உயர்வால் விவசாயிக்கு லாபம் இல்லை. வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை கொள்முதல் முழுமையாக செய்யப்படவில்லை. குறிப்பிட்ட இலக்கு வைத்து கொப்பரை கொள்முதல் செய்யப்ப டுகிறது. இதனைத் தவிர்த்து கொப்பரையை முழுமையாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து விரைவில் பிரதமரை நேரில் சந்தித்து கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
- ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
கோவை,
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு கரும்பு, நெல் முழுமையாக கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயையும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 1164 கிலோவாக மாற்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகள் கிடைக்காமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை காலியாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான பெதப்பம்பட்டி, அவினாசி, சேவூர், வடக்கிப்பாளையம் ஆகிய கிடங்கில் வைக்க வழிவகை செய்து கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் முழுவதையும் எண்ணையாக மாற்றி ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திற்கும் போதுமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் திட்டம் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிந்த பின்னரும் கிராமங்களுக்கு மோசமான குடிநீர் செல்கிறது. எனவே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அரசு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சில்லிங் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.
- கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
- இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் விற்பனனக்குழு செயலாளர் சரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு அரவை கொப்பரை தேங்காய்யானது 6200 மெ டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிலோ ஒன்றிற்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் கொள்முதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 3-ந்தேதி பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ேதங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.
இதில் 15 விவசாயிகளிடமிருந்து 5 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
நிகழ்விற்கு அண்ணா துரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மார்டின் எட்வர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை ேதங்காய் விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் கொப்பரை ேதங்காய்யின் ஈரப்பதம் 6 சதவீதற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் 10 சதவீதத்திற்குள்ளும், சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் குறைந்தபட்ச சராசரி தரத்துடன் இருக்குமாறும் உறுதி செய்து சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் மேற்கூறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொப்பரை க்குரிய கிரயத் தொகையானது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இைணயம் மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 15,900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் விளைவித்த அரவை கொப்பரை, பந்து கொப்பரை ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 வீதம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலகத்தை 0421 2213304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
- கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மூலம் 1000 டன் அரவைக் கொப்பரை ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிலோவிற்கு ரூ.105 என்ற விலையில் இதுவரை 6500 கிலோ தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 350 விற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கொப்பரை கொள்முதல் பணி ஜூலை 31-ந்தேதி முடிய உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 96778 44623 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பி.ஏ.பி. பாசனம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அதிகளவில் தென்னை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பெய்யாததால் தென்னை மரங்களில் போதிய அளவு தேங்காய் விளைச்சல் இல்லை. இதனால் தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தியும் வெகுவாக குறைந்தது.
இது குறித்து சிறுக்களந்தை பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
தேங்காய் பறித்து விற்பனை செய்வதைவிட கொப்பரை தேங்காயாக மாற்றி விற்பனை செய்வதில் தான் அதிக லாபம் இருக்கிறது. தேங்காயை அப்படியே தான் வியாபாரிக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் கொப்பரை தேங்காய் தயாரித்தால் கொப்பரை தனியாகவும், தொட்டியை (சிரட்டை) தனியாகவும் விற்பனை செய்யலாம்.
கடந்த வாரம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 115-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 95-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் தென்னை மரங்கள் காய்ந்து, தேங்காய் உற்பத்தி குறைந்துது. போதிய அளவு தண்ணீர் விட முடியாததால், தேங்காய் போதிய வளர்ச்சியும் குறைவாக உள்ளது.
இதனால் 100 கொப்பரை தேங்காய் 13 கிலோ தான் இருக்கிறது. ஆனால் நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக இருக்கும் போது 100 கொப்பரை தேங்காய் 16 கிலோ வரை இருக்கும்.
மேலும் கொப்பரை தேங்காய் தயாரித்து விற்கும் போது அதிகப்படியான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. கொப்பரை தேங்காய் களத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களில் முன் பணம் வாங்கியவர்களுக்கு ரூ. 230 முதல் ரூ. 250 வரையும், முன் பணம் வாங்காத வர்களுக்கு தென்னை மரம் ஏறி 1000 தேங்காய்களை பறிப்பதற்கு ரூ. 850 முதல் ரூ. 1000-ம் வரையும், தேங்காயை உரிப்பதற்கு ரூ. 500-ம், தொட்டி மற்றும் கொப்பரையை தனியாக பிரிப்பதற்கு ரூ. 250-ம் கூலி வழங்கப்படுகிறது. தேங்காய் விளைச்சல் போதிய அளவில் இல்லாத நிலையில், கொப்பரை உற்பத்தி இருக்கிறது. ஆனாலும் கூடுதல் விலை கிடைக்கவில்லை.
இதனால் கொப்பரை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்